குரூப் பி, சி பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்
- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரூப் பி மற்றும் குரூப் சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
- தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.
சேலம், அக்.8-
மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரூப் பி மற்றும் குரூப் சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளி யிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.
இத்தேர்விற்கான கல்வித்தகுதி, குறைந்த பட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்புடன் 1.1.2022 அன்றைய நிலையில் வயது வரம்பு, எஸ்.சி. எஸ்.டி பிரிவினர் 35 வயதுக்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் மற்றும் பொதுப்பிரிவினருக்கு 30 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
மேலும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதி லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் அதிக அளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகை யில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 11-ந்தேதி இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் இப்பயிற்சிவகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.