தொடர் மழையால் செடிகளிலேயே தக்காளி அழுகியது
- கிலோ 8 ரூபாய் இருந்து 10 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
- கனமழை காரணத்தால் தக்காளி வரத்து அதிகரித்து அதனால் விலை குறைந்துள்ளது.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான சாமனூர், அத்தி மூட்லு, கானூர் கைனி, அகரம், கல்லாகரம், சாஸ்திர முட்லு, பன்னி பட்டி, உலகானஅள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர் .
இந்நிலையில் மாரண்டஅள்ளி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நிலங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் தக்காளிகள் செடியிலே அழுகும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில் ஏக்கர் ஒன்றுக்கு உழவு கூலி , தக்காளி நாற்று, உரம் குச்சி கட்டுதல் ஆள் கூலி என ரூ. 1 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளோம் .தற்போது தக்காளியின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கிலோ 8 ரூபாய் இருந்து 10 ரூபாய் வரை விற்பனை ஆகிறது கனமழை காரணத்தால் தக்காளி வரத்து அதிகரித்து அதனால் விலை குறைந்துள்ளது. இதனால் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் கடும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.