ஏற்காடு அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலிகூலி தொழிலாளர்கள் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- கோவிந்தன் (வயது 40),விவசாயி. இவர் பொன்னன் என்பவரது வயலில் வேலை செய்து வந்தார்.
- டிராக்டர் மேடான பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பட்டை இழந்து ஓடி கவிழ்ந்தது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ளது பெலாக்காடு. இந்த ஊரைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 40),விவசாயி. இவர் பொன்னன் என்பவரது வயலில் வேலை செய்து வந்தார். நேற்று கோவிந்தன் வயலில் இருந்து டிராக்டரை ஓட்டிக்கொண்டு பெலாக் காட்டிற்கு வந்து கொண்டி ருந்தார்.டிராக்டரில் பெலாக் காட்டைச் சேர்ந்த தொழிலா ளிகள் பழனிசாமி, இன்னொரு பழனிசாமி ஆகியோர் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். டிராக்டர் மேடான பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பட்டை இழந்து ஓடி கவிழ்ந்தது.
இதில் கோவிந்தன் டிராக்டரின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார். பலத்த காயம் அடைந்த கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.டிராக்ட ரில் இருந்த கூலி தொழிலா ளர்கள் பழனிசாமி உள்ளிட்ட 2 பேரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பி னர். இதுபற்றி ஏற்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சேலம் ரூரல் டி.எஸ்.பி. தையல்நாயகி மற்றும் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பலியான விவசாயி கோவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.