திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் கேட்டு கமிஷனரிடம் வியாபாரிகள் முறையீடு
- காந்தி மார்க்கெட்டில் கமிஷனர் ரவிச்சந்திரன் இன்று மார்க்கெட்டிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
- குப்பைகள் அகற்ற வேண்டும் மற்றும் குடிநீர், மின்விளக்கு, டூவீலர் பார்க்கிங் ஆகியவை கேட்டு வியாபாரிகள் வலியுறுத்தினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மலைக்கோ ட்டை அருகே 280 கடைகளுடன் காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறி கள், இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிலாந்து, பெங்களூர் உள்பட பல்வேறு நாடுகள் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 100டன் காய்கறி கள் வருகிறது. மேலும் ரூ. 5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
புதிதாக பதவியேற்ற கமிஷனர் ரவிச்சந்திரன் இன்று மார்க்கெட்டிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகள் தங்களது குறைகளை முறையிட்டனர். குப்பைகள் அகற்றப்ப டவில்லை, குடிநீர், மின்விளக்கு, டூவீலர் பார்க்கிங் ஆகியவை கேட்டு வலியுறுத்தினர்.
இது குறித்து கமிஷனர் ரவிச்சந்திரன் கூறுகையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க இருபுறமும் விரிவுபடுத்தவும், துர்நாற்றம் இல்லாத அளவிற்கு குப்பைகள் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க ப்படும். பொதுக்கழிப்பிட வசதி, பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மாநகர் நல அலுவலர் செபாஸ்டின், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், உதவி கமிஷனர் வில்லியம் சகாயராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் வள்ளி ராஜம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தங்கவேல், கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.