உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சருக்கு வியாபாரிகள் மனு அனுப்பும் போராட்டம்

Published On 2022-09-12 10:06 GMT   |   Update On 2022-09-12 10:06 GMT
  • ஒரு கட்டத்தில் அந்த உழவர் சந்தை செயல்படாமல் போனது.
  • ரூ.1 கோடிவரை வருமான இழப்பு ஏற்படும் என சுட்டி காட்டப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 2006 -ல் கதர்துறை அமைச்சராய் இருந்த தற்போதைய வனத்துறை அமைச்சர் ராமசந்திரனால் உழவர் சந்தை திறந்து வைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த உழவர் சந்தை செயல்படாமல் போனது.

இந்த நிலையில் தினசரி மார்க்கெட் பகுதியில் 40 வருட காலமாக இயங்கி கொண்டிருக்கும் கடைகளின் ஒரு பகுதியில் 64 கடைகளை அப்புறபடுத்தி விட்டு அந்த இடத்தில் உழவர் சந்தை அமைக்க ஆய்வுகள் நடைபெற்றனஇது வியாபாரிகளிடையே அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்டுத்தியது

மார்க்கெட்டின் அந்த கடைகளை நம்பி வாழும் சுமார் 300 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என மார்க்கெட் வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் உழவர் சந்தையை மார்க்கெட் பகுதியில் அமைக்க கூடாது என கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் , வாகன டிரைவர்கள், உரிமையாளர்கள் சார்பில் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.பழைய இடத்திலேயே உழவர் சந்தை அமைக்க வேண்டும், இல்லாவிட்டால் புதிய நூலகம் அருகே உள்ள பேருராட்சி இடம், என்.சி.எம்.எஸ் மைதானம், ரைபில் ரேஞ்ச் கால்நடை மைதானம் ஆகிய இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து உழவர் சந்தை அமைக்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மார்க்கெட் பகுதியில் கடைகளை அகற்றி உழவர் சந்தை அமைந்தால் பேருராட்சிக்கு ரூ.1 கோடிவரை வருமான இழப்பு ஏற்படும் என சுட்டி காட்டப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News