உள்ளூர் செய்திகள்

ஊட்டடியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-11-14 08:58 GMT   |   Update On 2022-11-14 08:58 GMT
  • சாலையோரம் உள்ள மண் ஈரப்பதமாக காணப்படுகிறது.
  • குன்னூர் பகுதியில் பரவலாக பெய்து வருகிறது.

ஊட்டி

ஊட்டியில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலையோரம் உள்ள மண் ஈரப்பதமாக காணப்படுகிறது. இதனால் காற்று வீசும்போது மரங்கள் விழுந்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று ஊட்டி அருகே சோலூர் டன்சான்டேல் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். 3 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது. ஊட்டி-மஞ்சூர் சாலையில் மரம் விழுந்தது. இதனை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர். ஊட்டியில் மழை குறைந்தது. குன்னூர் பகுதியில் பரவலாக பெய்து வருகிறது. எனவே, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட மலைப்பாதையில் வரும் வாகனங்கள் மரங்களுக்கு அடியில் நிறுத்த வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். நேற்று மழை குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

Tags:    

Similar News