ஆஸ்பத்திரிக்கு முன்பே பயணிகளை இறக்குவதால் கோவை லங்கா கார்னரில் போக்குவரத்து நெரிசல்
- ஒரு நாளைக்கு சராசரியாக 500க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் லங்கா கார்னர் பாலம் வழியாக காந்திபுரம் செல்கிறது.
- போக்குவரத்து அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குனியமுத்தூர்
கோவை உக்கடம், டவுன்ஹாலில் இருந்து காந்திபுரம் செல்லும் அனைத்து பஸ்களும் லங்கா கார்னர் பாலம் வழியாக செல்கிறது. அப்போது அந்த வாகனங்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கு முன்பாகவே பயணிகளை இறக்கி விடுகின்றனர்.
இதனால் லங்கா கார்னர் பாலம் அருகில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நிற்கின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ஒரு நாளைக்கு சராசரியாக 500க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் உக்கடத்தில் இருந்து லங்கா கார்னர் பாலம் வழியாக காந்திபுரம் செல்கிறது.
அப்படி செல்லும்போது பெரிய ஆஸ்பத்திரிக்கு செல்லும் பயணிகளை லங்கா கார்னர் பாலம் அருகிலேயே நிறுத்தி இறக்கி விடுகின்றனர்.
இதனால் அப்பக தியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே லங்கா கார்னர் பாலம் அருகே பஸ்களை நிறுத்தாமல் ரயில் நிலையத்துக்கு கொண்டு சென்றால், அந்த பகுதியில் வாகன நெரிசலை தவிர்க்க முடியும். ெரயில் நிலையம், லங்கா கார்னர் பாலத்திற்கு இடையே அதிக தூரம் இல்லை.
எனவே பொதுமக்கள் ரயில் நிலைய ஸ்டாப்பில் இறங்கி, பெரிய ஆஸ்பத்திரிக்கு சுலபமாக நடந்து செல்லாம். இல்லையெனில் உக்கடம், டவுன்ஹாலில் இருந்து வரும் பஸ்கள் லங்கா கார்னர் பாலத்தில் இடதுபுறம் திரும்பாமல் பெரிய ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாண்ட் சென்று வரலாம். அதன்பிறகு ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று அடையலாம்.
பெரிய ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, திரும்ப 5 நிமிடம் ஆகும். ஆனால் பஸ் டிரைவர்கள் பெரிய ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாண்ட் செல்லாமல் லங்கா ஹார்னர் பாலத்தில் இருந்தே இடதுபுறம் திரும்பி விடுகின்றனர். இதனால்தான் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. எனவே போக்குவரத்து அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.