உள்ளூர் செய்திகள்
அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் போக்குவரத்து அதிகாரிகள் திடீர் வாகன சோதனை
- பஸ் நிலையத்தில் திடீரென வாகன சோதனை நடத்தினர்.
- சரியாக உள்ளதா அதிகமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது.
கடலூர்:
சிதம்பரத்தில் இருந்து புவனகிரி வழியாக கடலூர், விருத்தாசலம் செல்லும் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதை தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா மற்றும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் பஸ் நிலையத்தில் திடீரென வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்களில் ஏறி கட்டண சீட்டுகளைப் பெற்று அவை சரியாக உள்ளதா அதிகமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அதிக கட்டணம் வசூலித்த பஸ்சுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறுகையில் அனைத்து பஸ் கண்டக்டர்களும் சரியான பயணச்சீட்டையே பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.