சாத்தான்குளம் அருகே நுண்ணீர் பாசனம் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
- நுண்ணீர் பாசன பாரமரிப்பு பயிற்சி மீரான்குளம் கிராமத்தில் நடைபெற்றது.
- பயிற்சியின் போது நுண்ணீர் பாசன கருவிகள் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
சாத்தான்குளம்:
ஆழ்வார்திருநகரி வட்டார, வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் நுண்ணீர் பாசன பாரமரிப்பு பயிற்சி சாத்தான்குளம் அருகே மீரான்குளம் கிராமத்தில் நடைபெற்றது.
வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ் தலைமை தாங்கி பயிற்சியின் நோக்கம், நுண்ணீர் பாசனம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அரசின் மானியத் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். துணை வேளாண்மை அலுவலர் தங்கமாரியப்பன் வேளாண்மைதுறை மூலம் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் நுண்ணீர் பாசனம் அமைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், இரிகேசன் களப்பணியாளர் அபிசேக் நுண்ணீர் பாசன கருவிகள் பயன்பாடுகள் மற்றும் பாரமரிப்பு தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி அட்மா, தொழில் நுட்ப மேலாளர் ஜேசுதாசன், உதவிதொழில் நுட்பமேலாளர்கள் நளினி, சூசைமாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் சீதாலெட்சுமி நன்றி கூறினார்.