உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நம்ம ஊரு சூப்பர் திட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மரக்கன்றுகள்

Published On 2022-09-29 04:44 GMT   |   Update On 2022-09-29 04:44 GMT
  • நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

செந்துறை:

நத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுகுடி ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் பொது இடங்கள், பள்ளி, ஊராட்சி அலுவலகம், நூலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பொது கழிவறை மற்றும் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் சரவணன், உதவி திட்ட அலுவலர் தேன்ராஜ், வட்டார இயக்க மேலாளர் விஜயலட்சுமி, கணக்காளர் விஜயலட்சுமி, சமுதாய சுய உதவி குழு பயிற்றுநர் ராதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொது இடங்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றவும்,

மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சுத்தம் செய்த தேதியை குறிப்பிடுமாறும், பொது இடங்களில் குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளையும், ஊராட்சி ஒன்றிய தலைவரையும் அறிவுறுத்தினர்.

மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆணையாளர்கள் கிருஷ்ணன், முனியாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் கோகிலவாணி வீரராகவன், ஊராட்சி செயலர் வீரபாண்டி, பணித்தள பொறுப்பாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News