உள்ளூர் செய்திகள்

ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

திண்டுக்கல்லில் காமராஜர் பிறந்தநாளையொட்டி மரக்கன்று நட்ட மாணவர்கள்

Published On 2022-07-16 05:13 GMT   |   Update On 2022-07-16 05:13 GMT
  • திண்டுக்கல்லில் பசுமை தினம் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.
  • விழாவில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் எஸ்.எஸ்.எம் (அகாடமி மற்றும் மெட்ரிக்) பள்ளிகளின் சார்பில் பசுமை தினம் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது. மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பச்சை நிற உடையில் வந்து இருந்தனர்.

பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பேச்சு மற்றும் பாடல்கள் மூலம் இயற்கையை பாதுகாப்பதின் முக்கியத்துவதையும் பல்வேறு காய்கறி பழவகைகளின் சிறப்புகள் பற்றி விளக்கப்பட்டது. முன்னதாக காமராஜர் பிறந்த நாளை ஒட்டி கல்வி தினம் கொண்டாடப்பட்டது.

காமராஜரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முடிவில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். விழாவிற்கு கல்வி ஆலோசகர் முனைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

அனைத்து ஆசிரிையகளும் கலந்து கொண்டனர். பொறுப்பாளர்கள் மதுமிதா , ஜெயா, குளோரி மற்றும் கலைவாணி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Tags:    

Similar News