உள்ளூர் செய்திகள்

தேசிய நெடுஞ்சாலை சார்பில் மரம் நடும் விழா

Published On 2023-07-14 09:16 GMT   |   Update On 2023-07-14 09:16 GMT
  • தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி, தொப்பூர் டோல் ரோடு இணைந்து மரம் நடும் விழா நடைபெற்றது.
  • நெடுஞ்சாலை ஓரத்தில் விடுபட்ட இடத்தில் மரக்கன்றுகள் நட முடிவெடுக்கப்பட்டு முதல் கட்டமாக டோல்கேட் முதல் பாளையம் வரை 50-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது.

தருமபுரி,

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்திய அரசு பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி வருகிறது. அதில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் நேற்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி, தொப்பூர் டோல் ரோடு இணைந்து மரம் நடும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திட்டத் தலைவர் நரேஷ் (கிருஷ்ணகிரி, தொப்பூர் டோல் ரோடு), தொழில்நுட்ப மேலாளர் திலீப் (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேலம்), மற்றும் குழு தலைவர் உப்பம் கன்சல்டன்சி ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் 500 மரங்கள் இலக்காக கொண்டு தொப்பூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விடுபட்ட இடத்தில் மரக்கன்றுகள் நட முடிவெடுக்கப்பட்டு முதல் கட்டமாக டோல்கேட் முதல் பாளையம் வரை 50-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது.

இதில் பாளையம் டோல் பிளாசா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News