- பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
- விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி ஜி-20 கல்விப் பணிக்குழுவின் பொதுமக்கள் பங்கேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மரக்கன்று நடும் விழா திருவாரூர் அடுத்த அலிவலத்தில் நடைபெற்றது.
இதில் மக்கள் கல்வி நிறுவன தலைவர் கவுசல்யா தலைமை தாங்கினார். திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் முன்னிலை வகித்தார்.
அலிவலம் ஊராட்சி தலைவர் நிர்மலா பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
தொடர்ந்து, பயனாளி களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
பின்னர், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அலுவ லர்கள் திருலோகச்சந்தர், கனகதுர்க்கா, மனோஜ், பயிற்றுனர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.