தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மரக்கன்று நடும் விழா
- மதுரை மண்டல தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
- நாடு முழுவதும் 75 லட்சம் மரக்கன்றுகளை நட நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பழனி:
மதுரை மண்டல தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் பழனி அருகே மொல்லம்பட்டி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு நெடுஞ்சாலை ஆணைய திண்டுக்கல் திட்ட இயக்குனர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட வனஅலுவலர் பிரபு முன்னிலை வகித்தார். பின்னர் சாலையோரத்தில் பள்ளி மாணவர்களை கொண்டு 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதுகுறித்து நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், நெடுஞ்சாலையோரம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தலே ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும். மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் நாடு முழுவதும் நேற்று 100 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. 'சுற்றுச்சூழலை நிலைநிறுத்துவோம்' என்ற செய்தியை மக்களிடையே கொண்டு செல்ல மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது.
வருகிற சுதந்திர தினத்துக்குள் நாடு முழுவதும் 75 லட்சம் மரக்கன்றுகளை நட நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது என்றனர்.