உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்.


தோரணமலையில் மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2022-11-22 09:30 GMT   |   Update On 2022-11-22 09:30 GMT
  • மலைக்கோவிலின் படிக்கட்டுகளில் இரு புறமும் சுமார் 1000 மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.
  • வழக்கறிஞர் எஸ்.கே.டி.காமராஜ் கலந்து கொண்டு முதல் மரக்கன்றை நட்டு மரம் நடுவிழாவை தொடங்கி வைத்தார்.

கடையம்:-

கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவில் அகத்தியர் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது.

இந்த முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் படிக்கட்டுகளில் நடந்து சென்று தான் மலை மீது உள்ள முருகன் கோவிலை அடைய முடியும். இந்த மலைக்கோவிலின் படிக்கட்டுகளில் இரு புறமும் சுமார் 1000 மரக்கன்றுகளை நட்டு மலை பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு நிழல் ஏற்படுத்தி தருவது என தோரணமலை முருகன் கோவில் பக்தர்கள் குழு சார்பில் மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.

கீழப்பாவூர் முன்னாள் யூனியன் சேர்மன் வழக்கறிஞர் எஸ்.கே.டி.காமராஜ் கலந்து கொண்டு முதல் மரக்கன்றை நட்டு மரம் நடுவிழாவை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மரம் நடுவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கே.ஏ .செண்பகராமன் செய்திருந்தார்.


Tags:    

Similar News