குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 4 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன
- சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் பாதிப்பு
- குடியிருப்புகளில் சாய்ந்ததால் வீடுகள் சேதம்
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா் மற்றும் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள ஒருசில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் ராட்சத மரங்கள் முறிந்து நடுரோட்டில் கிடக்கின்றன. இதனால் அங்கு போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நீலகி ரியின் பல்வேறு பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது குன்னூா்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை ஓரத்தில் நின்றிருந்த ராட்சத மரங்கள் முறிந்து விழுந்தன.
மேலும் குரும்பாடி, வண்ணா ரப்பேட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, புரூக் லேண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளிலும் ராட்சத மரங்கள் விழுந்து கிடக்கின்றன.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் சம்பவ இடங்களுக்குச் சென்று மரங்களை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தி வருகின்றனா்.
இதற்கிடையே லேம்ஸ் ராக், அட்டடி ஆகிய பகுதி களில் உள்ள 2 குடியிருப்புகள் மீது ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. இத னால் அங்கு உள்ள வீடுகள் சேதம் அடைந்தன.
எனவே அங்கு வசிக்கும் பொது மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.