மும்மதத்தினர் பங்கேற்ற சமூக நல்லிணக்க மாநாடு
- நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, மற்றும் பரமத்தி நூருல் இஸ்லாம் புது பள்ளிவாசல் சார்பில் மிலாது நபி மற்றும் சமூக நல்லிணக்க மாநாடு பரமத்தி பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
- இந்த மாநாட்டில் நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தார்.
பரமத்தி வேலூர்:
பரமத்தியில் அனைத்து மதத்தினர் பங்கேற்ற மிலாது நபி, மத நல்லிணக்க மாநாடு நடைபெற்றது.
மத நல்லிணக்க மாநாடு
நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, மற்றும் பரமத்தி நூருல் இஸ்லாம் புது பள்ளிவாசல் சார்பில் மிலாது நபி மற்றும் சமூக நல்லிணக்க மாநாடு பரமத்தி பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தார்.
பரமத்தி நூருல் இஸ்லாம் புது பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் இமாம்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
கலந்து கொண்டவர்கள்
மாநாட்டில், நாமக்கல்லை அடுத்துள்ள கொல்லிமலை ஜீவகாருண்ய விஷ்வ கேந்திரா ஓம் குருவன நிறுவனர் பிரம்மஸ்ரீ பார்த்தசாரதி சுவாமிகள், சேலம் நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரி பேராசிரியர் முகமது அபுதாஹிர், நாமக்கல் காவடிப்பட்டி கிருபாசனம் சர்ச் பாஸ்டர் வில்சன் டோமினிக், மற்றும் இந்து கிறிஸ்தவ, முஸ்லிம் குருமார்கள் கலந்து கொண்டு மத நல்லிணக்க சிறப்புரையாற்றினர்.
தோழமையுடன்
நாட்டில் பல்வேறு பிரித்தாலும் சூழ்ச்சியால் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் நடக்கும் செயல்பாடுகளுக்கு இடம் கொடுக்காமல் அனைத்து மதத்தினரும் தோழமையுடன் செயல்பட வேண்டும் என கேட்டு கேட்டுக்கொண்டனர். இந்த சமூக நல்லிணக்க மாநாட்டில் இந்து, முஸ்லீம், கிறிஸ்த குருமார்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.