உள்ளூர் செய்திகள் (District)

திருச்சி நிதி நிறுவன மோசடியில் தலை மறைவாக இருந்த 2 முக்கிய புள்ளிகள் கைது

Published On 2023-05-06 08:59 GMT   |   Update On 2023-05-06 08:59 GMT
  • திருச்சி நிதி நிறுவன மோசடியில் தலை மறைவாக இருந்த 2 முக்கிய புள்ளிகள் கைது செய்யபட்டனர்
  • பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் ஆங்காங்கே காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

திருச்சி:

திருச்சி மற்றும் தஞ்சாவூரை தலைமை இடமாக கொண்டு ஒரு நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதனை 9 பேர் கூட்டாக தொடங்கி நடத்தி வந்தனர். இதன் கிளை நிறுவனங்கள் புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட 10 இடங்களில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி திருச்சி மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த நிறுவனத்தில் பல கோடி பணத்தை முதலீடு செய்தனர்.சிறிது காலம் அந்த நிறுவனம் வட்டி வழங்கியது. பின்னர் திடீர் என நிறுத்திவிட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் ஆங்காங்கே காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.பின்னர் அந்த வழக்கு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் கடந்த டிசம்பர் மாதம் அந்த வழக்கு மீண்டும் தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது பல மாதங்களாக தேடப்பட்டு வந்த அந்த நிறுவனத்தைச் சேர்ந்த திருச்சி ராமநாதன் (வயது 55) தஞ்சாவூர் ராஜேஷ் (43) ஆகிய இருவரை தஞ்சாவூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தை எங்கெங்கு முதலீடு செய்து உள்ளனர் என விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும்மேலும் 7 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News