உள்ளூர் செய்திகள்

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 26-ந்தேதி ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-24 09:52 GMT   |   Update On 2022-07-24 09:52 GMT
  • திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து 26-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது
  • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடைபெறுகிறது

திருச்சி:

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் மலைக்கோட்டை வி.அய்யப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கினங்க திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டணம், சொத்துவரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டண உயர்வு உள்ளட சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் முன்னாள் அமைச்சரும் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் தங்கமணி எம்.எல்.ஏ. தலைமையில் நாளை மறுநாள் 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

மேற்கண்ட நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட அணி செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி,

மாணவர் அணி, மகளிர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, மீனவர் அணி, சிறுபான்மையினர் அணி. விவசாய் அணி, மருத்துவர் அணி. அமைப்புசாரா ஓட்டுனர் அணி, இலக்கிய அணி. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, வர்த்தக அணி,

தகவல் தொழிற்நுட்பப்பிரிவு, கலைப்பிரிவு, மாநில பி.டி. பிரிவு, டி.என்.எஸ்.டி.சி. மண்டல தகவல் தொழில் நுட்பப்ரிவு ஆகிய அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News