50 ஆக்கிரமிப்பு கடைகள் திடீர் அகற்றம்
- திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் 50 ஆக்கிரமிப்பு கடைகள் திடீர் அகற்றப்பட்டது
- போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
திருச்சி,
திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் சமீபத்தில் நடந்தது. இதில் திருச்சி மத்திய நிலைய சாலை மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து புகார்கள் கூறப்ப ட்டது. இதையடுத்து கலெ க்டர் ஆக்கிரப்புகளை அகற்றுமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.அதன் பேரில் திருச்சி மாநகராட்சி உதவி கமிஷனர் சண்முகம், இளநிலை பொறியாளர் பாவா பக்ருதீன், சுகாதார ஆய்வா ளர் பிரின்ஸ் சகாயராஜ் ஆகியோர் கொண்ட அதிகா ரிகள் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையி லான போலீசார் உதவியுடன் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர் .திருச்சி மத்திய பஸ் நிலையத்தின் உள்பகுதி, வில்லியம்ஸ் ரோடு, பாரதி தாசன் ரோடு, ராக்கின்ஸ் ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்து உள்ள 50க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஜேசிபி எந்திரம், இரண்டு லாரிகள் உதவியுடன் 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சாலை மற்றும் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் உட னடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று தெரிவித்தனர்.