உள்ளூர் செய்திகள் (District)

அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை

Published On 2023-02-22 10:36 GMT   |   Update On 2023-02-22 10:36 GMT
  • திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்
  • கோவில் மருளாளி பேச்சியம்மன் வேடமணிந்து வந்தார்

மலைக்கோட்டை:

திருச்சி பெரிய கடைவீதி பகுதியில் பூக்குளம் அங்காள பரமேஸ்வரி கோவில் உள் ளது. இந்த கோவிலில் அங் காள பரமேஸ்வரி, பேச் சியம்மன், மதுரை வீரன், பாலதண்டாயுதபாணி, நவ–கிரகங்கள் சன்னதி உள்ளது. இந்த கோவிலில் 87-ம் ஆண்டு மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் கடந்த 18-ந் தேதி தொடங்கியது.அன்று இரவு காப்பு அணிவித்து, கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு முகக்கப்பரை எடுத்து வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 19-ந்தேதி மகா அபிஷேக ஆராதனை மற்றும் புஷ்பக்கப்பரை தாங்கும் உற்சவமும் அதை தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் நிகழ்ச்சியும் மகா தீபாராதனை நடைபெற்றது. 20-ந்தேதி உற்சவர் அம்பா–ளுக்கு அன்னபூரணி அலங் காரத்துடன் மகா தீபாரா–தனை நிகழ்ச்சி நடைபெற் றது.

21-ந்தேதியான நேற்று காலை 10.30 மணிக்கு மேல் அங்காள பரமேஸ்வரி மற் றும் பேச்சி அம்மனுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு மேல் பேச்சி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும் அருட்காட்சி–யுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது.தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு மேல் மயானக்கொள்ளை எனப்படும் அஸ்தி பூஜை அலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் மருளாளி ராஜேந்திரன், பேச்சியம்மன் வேடத்தில் அங்காள பர–மேஸ்வரி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க, கையில் சூலாயுதம் ஏந்தி பெரிய கடை வீதி, என்.எஸ்.பி. ரோடு, நந்தி கோவில் தெரு, சிந்தாமணி பஜார், ஓடத்துறை வழியாக ஓயாமரி சுடுகாட்டிற்கு சென்று அங்கு எரிந்து கொண்டிருந்த ஒரு பிணத்தை சூலாயுதத்தால் குத்தி எடுத்து சாப்பிட்டு, பின்னர் குறி சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை–யொட்டி கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News