உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி

Published On 2022-09-15 10:10 GMT   |   Update On 2022-09-15 10:10 GMT
  • அரசு பள்ளியில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • உணவே மருந்து, மருந்தே உணவு

திருச்சி:

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜாக்கிர் ஜான் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மணிமாறன், நாட்டு நலப்பனித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சேகர், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்டக் கன்வீனர் நாகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் மாதவன் கலந்து கொண்டு மாணவர்கள் புத்தக வாசிப்பு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மேலும் 6 முதல் 12 வரை பயிலும் மாணவ மாணவிகளை காலை 11 மணி முதல் 12 மணி வரை புத்தக வாசிப்பில் ஈடுபடுத்தி அவர்களை ஊக்கப்படுத்தி விட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து தண்டலை புத்தூர் சித்த மருத்துவ ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், உணவே மருந்து, மருந்தே உணவு என்ற வாசகத்திற்கு ஏற்ப மூலிகைகள் மற்றும் உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும் காய்கறிகள், கீரைகள், பழம் வகைகள் பற்றி மாணவர்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் காட்சி பொருள் வைக்கப்பட்டு அதன் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வருவாய் துறை ஆய்வாளர் கார்த்திக் கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News