உள்ளூர் செய்திகள் (District)

காளான் உற்பத்திக்கு ரூ.1 லட்சம் மானியம் பெற அழைப்பு-தோட்டக்கலை துறையினர் அறிவிப்பு

Published On 2023-01-04 08:51 GMT   |   Update On 2023-01-04 08:51 GMT
  • காளான் உற்பத்திக்கு ரூ.1 லட்சம் மானியம் பெறலாம் என தோட்டக்கலை துறையினர் அறிவித்துள்ளனர்
  • தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் விருப்பமுள்ள மகளிர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனர்.

மணப்பாறை:

மணப்பாறை வட்டார தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை மூலம் கிராமப்புற மகளிர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க சிறிய அளவிலான காளான் உற்பத்தி கூடம் அமைக்க கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. மணப்பாறை வட்டாரத்தில் நடப்பாண்டிற்கான கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கிராமங்களான செட்டியபட்டி, சாம்பட்டி, சித்தாநத்தம் மற்றும் கலிங்கப்பட்டி வருவாய் கிராம மகளிர்களுக்கும் கடந்த ஆண்டிற்கான கருப்பூர், புத்தாநத்தம், பண்ணப்பட்டி, பொய்கைப்பட்டி, கண்ணுடையான்பட்டி, எப்.கீழையூர் மற்றும் கே.பெரியப்பட்டி வருவாய் கிராம பெண்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் விருப்பமுள்ள மகளிர்கள் இத்திட்டத்தில் பயன்பெற தோட்டக்கலை துறையின் அதிகார்பூர்வ இணையதளமான www.tnhorticulture.tn.gov.in/tnhortinet/registration new.php மூலம் பதிவு செய்தும் அல்லது மணப்பாறை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகியும் பயன்பெறலாம் என மணப்பாறை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News