உள்ளூர் செய்திகள்

சட்ட விரோத மது விற்பனை தடுக்கப்பட்டு வருகிறது

Published On 2023-05-22 08:56 GMT   |   Update On 2023-05-22 08:56 GMT
  • திருச்சி மாநகர டாஸ்மாக் பார்களில் மது விற்பவர்கள் மீது நடவடிக்கை
  • போலீஸ் கமிஷனர் சத்யபிரியா தகவல்

திருச்சி,

திருச்சி மாநகர காவல் துறை சார்பில் மன்னார்புரம் போக்குவரத்து சிக்னல் ரோந்து வாகனங்களில் செல்லும் காவல் துறையினருக்கு பாக்கெட் கேமரா வழங்கும் நிகழ்வு இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா தலைமை தலைமை தாங்கி ரோந்து காவலர்கள் 54 பேருக்கு பாக்கெட் கேமராக்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-இந்த பாக்கெட் கேமராக்கள் ஹைவே பெட்ரோல் (நெடுஞ்சாலை ரோந்து) போலீசாருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது ரோந்து காவலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு வழக்கு தொடர்பாக சம்பவ இடத்துக்கு சென்று அவர்கள் அதை விசாரிக்கும் போது முழுவதும் பதிவாகிவிடும். பின்னர் விசாரணைக்கு அந்த பதிவுகள் நல்ல பயனை அளிக்கும். இந்த கேமராக்களின் மூலம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பதிவு செய்து கொள்ள முடியும்.இது 64 ஜி.பி. மெமரி திறன் கொண்டது. அவ்வப்போது பேக்கப் எடுத்துக் கொள்ள வசதியும் உள்ளது. குறைந்தபட்சம் ஐந்து மீட்டர் தொலைவில் நடைபெறுவதை துல்லியமாக பதிவு செய்து கொள்ளலாம். திருச்சி மாநகரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்களில் மதுபானம் விற்பவர்கள் மீதும் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.எந்த புகார் வந்தாலும் உடனடியாக போலீசார் சென்று அதிரடியாக சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருச்சி மாநகரில் அனுமதி இல்லாத பார்கள் எதுவும் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News