உள்ளூர் செய்திகள்

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா

Published On 2023-02-17 08:35 GMT   |   Update On 2023-02-17 08:35 GMT
  • திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது
  • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

திருச்சி:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சி–யார் கோவில் 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திரு–மங்கை–யாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ் வார் அவதரித்த திருத்தல–மாகவும் விளங்கு–கிறது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி–யது. அன்று முதல் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ் தானத்தில் திருமொழி சேவித்தலும், இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டியும், இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஜன சேவையும் நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நேற்று மாலை நடைபெற்றது. அதையொட்டி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து உற்சவ நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் நோக்கி வந்தார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசலை கடந்து உற்சவ நாச்சியார் வழிநடை உபயங்கள் கண்ட–ருளி, ஆழ்வார்-ஆச்சாரி–யார் மரியாதையாகி திரு–வாய்மொழி ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அப்போது சொர்க்க–வாசல் முன்பு திரண்டு நின்ற பக்தர்கள் உற்சவ நாச்சியாரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 9.45 மணி அளவில் வீணை வாத்தி–யத்துடன் மூலஸ்தா–னம் சென்ற–டைந்தார். இதனை தொடர்ந்து 19-ந்தேதி வரை திருவாய் மொழி திருநாட்கள் நடைபெறும். அன்றைய தினங்களில் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். வருகிற 20-ந்தேதி தீர்த்தவாரி, திருமஞ்சனம், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெறும். 21-ந் தேதி–யன்று இயற்பா சாற்று மறையுடன் விழா நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இயற்பா தொடக்கமும், மாலை 5.15 மணி முதல் இரவு 7.45 மணி வரை இயற்பா பிரபந்தம் சேவித்தல், திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் நடக்கிறது. இரவு 7.45 மணி முதல் 8.30 மணி வரை இயற்பா சாற்றுமறை திருத்துழாய் தீர்த்த வினி–யோகம் நடக்கிறது.


Tags:    

Similar News