உள்ளூர் செய்திகள்

திருச்சியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்-நீதிபதிகள், போலீசார், மாணவிகள் பயிற்சி

Published On 2022-06-21 09:55 GMT   |   Update On 2022-06-21 09:55 GMT
  • திருச்சியில் இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி நீதிபதிகள், போலீசார், மாணவிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர் தன்னெழுச்சியாக யோகா பயிற்சி பெற்றனர்
  • திருச்சி தேசியக் கல்லூரி முதல்வார் முனைவர் ஆர்.சுந்ததரராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, யோகாசன பயிற்சியினை தொடங்கி வைத்தார்

திருச்சி:

சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்து கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொது இடங்கள், தனிப்பட்ட பகுதிகள், வீடுகளில் பல மக்கள் யோகா செய்து வருகின்றனர். பட்டி தொட்டி முதல் பெருநகரங்கள் வரை அனைவரும் இன்று தன்னெழுச்சியாக யோகாசனங்கள் செய்து இந்த நாளை போற்றி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி கல்லுக்குழி ெரயில்வே மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருச்சி ெரயில்வே கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால் தலைமையில் யோகா ஆசிரியர் செல்வம் வழிகாட்டுதலின்படி திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ெரயில்வே தொழிலாளர்கள் பலர் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்.

அதேபோல் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் சர்வதேச யோகாசன தினத்தையொட்டி விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கான யோகாசன நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த யோகாசன நிகழ்வில் பங்கேற்ற சிறுவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்வமுடன் பல்ேவறு யோகாசனங்களை செய்தனர்.

இதேபோல் சர்வதேச யோகா தினத்தையொட்டி திருச்சி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாலக்கரை பகுதியில் அக்கட்சியினர் யோகாசனத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி உச்சநீதிமன்றம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆலோசனையின் படியும் இன்று காலை 6.30 மணியளவில் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிமன்றமும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், இணைந்து 2022 –ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

மனிதகுலத்திற்கான யோகா-2022 என்னும் தலைப்பில் நடைபெற்ற யோகா பயிற்சியினை திருச்சி முதன்மை மாவட்ட நிதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான கே.பாபு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மாவட்ட அனைத்து மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், உரிைமையில், குற்றவியில் நீதிபதிகள் உள்பட அனைவரும் பங்கேற்றனர்.

மேலும் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களும் கலந்துகொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதியுமான (பொ) சோமசுந்தரம் செய்திருந்தார்.

திருச்சி, தேசியக் கல்லூரியில் 4 (தமிழ்நாடு) பெண்கள் பட்டாலியன் என்.சி.சி. சார்பாக சர்வதேச யோகா தின விழா இன்று காலை 7.00 மணியிலிருந்து 7.30 மணிவரை திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. விழாவை தேசியக் கல்லூரி முதல்வார் முனைவர் ஆர்.சுந்ததரராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, யோகாசன பயிற்சியினை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சுபேதார் பி.வி.ரெட்டி யோகாசனங்களை விளக்கியதுடன், செய்தும் காண்பித்தார். அதனை என்.சி.சி. மாணவிகள் பார்த்து செய்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சுந்ததரராமனும் யோகாசனங்களை பிறருடன் சேர்ந்து செய்தார். ராணுவ வீரர்களான சுபேதார் மேஜர் லால்சந்த், சுபேதார் மேஜர் ஜி.எம்.சின்ஹா, லெப்டினன்ட் வி.வனிதா கலந்து கொண்டனர். இதில் திரளான என்.சி.சி. மாணவிகள் கலந்து கொண்டு தன்னெழுச்சியுடன் யோகாசனங்களை செய்து அசத்தினர்.

Tags:    

Similar News