உள்ளூர் செய்திகள்

நகை பட்டறை அதிபர் வீட்டில் ரூ.4.50 லட்சம் நகைகள் கொள்ளை

Published On 2023-05-28 08:12 GMT   |   Update On 2023-05-28 08:12 GMT
  • திருச்சி நகைபட்டறை அதிபர் வீட்டில் நகைகள் கொள்ளை
  • மர்ம ஆசாமிகளுக்கு கோட்ைட போலீசார் வலைவீச்சு

திருச்சி,

திருச்சி சஞ்சீவி நகர் அப்துல் கலாம் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவர் தனது வீட்டில் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். நகைக்கடைகளுக்கும், ஆர்டரின் பேரில் பொதுமக்களுக்கும் நகைகள் வடிவமைத்து கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.இந்த நிலையில் சந்திரன், அவரது மனைவி கமலா இருவரும் கடந்த வாரம் காசி புனித யாத்திரை புறப்பட்டு சென்றனர். வீட்டில் அவரது மாமியார் மனோன்மணியம் மற்றும் மகள் பிரதீஷா ஆகியோர் மட்டுமே இருந்தனர். அவர்கள் இருவரும் சம்பவத்தன்று திருச்சி பாபு ரோடு கீழ காசிபாளையம் பகுதியில் உள்ளமனோன்மணியம் மகன் பொன்னம்பலம் வீட்டிற்கு சென்று விட்டனர்.பின்னர் மறுநாள் காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவின் கதவு உடைக்கப்பட்டு இதில் வைக்கப்பட்டிருந்த நெக்லஸ், ஆரம் தோடு உள்ளிட்ட 20 பவுன் நகை உள்ளிட்ட ரூ.4.50 லட்சம் மதிப்பிலான தங்க நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.இது குறித்து உடனடியாக கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து கோட்டை போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு சோதனை செய்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பட்டறை அதிபர் வீட்டில் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News