உள்ளூர் செய்திகள்

மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2023-03-16 07:11 GMT   |   Update On 2023-03-16 07:11 GMT
  • புத்தாநத்தம் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார்
  • மருந்துகள் இருப்பு விபரம் குறித்து கேட்டறிந்தார்

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி புத்தாநத்தத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் மருத்துவமனையில் மருந்து இருப்பு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பான விபரங்களை பணியில் இருந்த மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனையில் பழுதடைந்துள்ள பழைய கட்டிடங்களை பார்வையிட்டு தொடர்புடைய அதிகாரிகளிடம் விரைந்து புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லி ராமசாமி, புத்தாநத்தம் அரசு மருத்துவமனை வட்டார மருத்துவர் டாக்டர் கிரிஷ்குமார், வட்டார மேற்பார்வையாளர் பாக்கிய செல்வன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முத்துமாரி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் சி.ஆர்.ராமசாமி, ஒன்றிய கவுன்சிலர் ரபீக், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன், மாவட்ட தலைவரும், கவுன்சிலருமான பைஸ் அகமது, மணப்பாறை நகர தலைவர் அக்பர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக மணப்பாறை ஒன்றியம் பெருமாம்பட்டி, புத்தாநத்தம், வையம்பட்டி ஒன்றியம் கரியாம்பட்டி ஆகிய பகுதிகளில் புதிய நியாய விலை கடைகளையும் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது திறந்து வைத்தார்.

Tags:    

Similar News