தொட்டியம் தர்மசாஸ்தா அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை
- தொட்டியம் தர்மசாஸ்தா அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை நடைபெற்றது
- மண்டல பூஜைைய முன்னிட்டு மூலவர் தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
தொட்டியம்:
திருச்சி மாவட்டம் தொட்டியம் நகரம் மதுரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வழிபாடு நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டல பூஜைைய முன்னிட்டு மூலவர் தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பழ வகைகள், தேன், நெய், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உட்பட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனை நடைபெற்று பின்பு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும், மாலை அணிந்த ஐயப்ப சாமிகளுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு மாலை வாணவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க ஸ்ரீ தர்மசாஸ்தா ஐய்யப்பன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் தொட்டியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டியம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்.