தொட்டியம் ெகாங்குநாடு பொறியியல் கல்லூரியில் ஜப்பானிய நிறுவனத்துடன் வேலைவாய்ப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- ஜப்பான் நாட்டைச்சார்ந்த டெக்னோ ஸ்மைல் இன்கார்பரேஷன் நிறுவன தலைவர் கென்யா அபே மற்றும் அந்நிறுவன ஆலோசகர் யாசுபுமிமேனகா ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜப்பானில் உள்ள உயர்மட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்களை பெற்று தருவது பற்றியும் இடம் பெற்றிருந்தது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்கள் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறுவதற்கும் மற்றும் உயர் கல்வி கற்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ஜப்பான் நாட்டைச்சார்ந்த டெக்னோ ஸ்மையில் இன்கார்பரேஷன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி கல்வி நிறுவன தலைவர் பிஎஸ்கே பெரியசாமி தலைமையில் நடை பெற்றது.
ஜப்பான் நாட்டைச்சார்ந்த டெக்னோ ஸ்மைல் இன்கார்பரேஷன் நிறுவன தலைவர் கென்யா அபே மற்றும் அந்நிறுவன ஆலோசகர் யாசுபுமிமேனகா ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மேலும் இந்நிகழ்வில் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் அசோகன், கேட்வே டு ஜப்பான் பிரைடே லிமிடெட் நிறுவன தலைவர் சரவணன், ஜப்பான் டோக்கியோ நெக்ஸ்ட்ஜென் கார்பரேசன் இயக்குநர் ராஜேஸ்குமார் சங்கரலிங்கம், பொறியியல் கல்லூரி டீன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை யோகப்பிரியா, பொறியியல் கல்லூரி டீன் திட்டங்கள் மற்றும் ஆலோசனை துறை முனைவர் விஜயகுமார் மற்றும் கல்வி நிறுவன வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநர் ஸ்ரீதர் பங்கு பெற்றனர்.
மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2022-ம் ஆண்டு முதல் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கேட்வே டு ஜப்பான் பிரைவேட் லிமிடெட் மூலம் எளிதில் ஜப்பானிய மொழியை கற்கவும் மற்றும் டெக்னோ ஸ்மைல் இன்கார்ப்பரேஷன் மூலம் ஜப்பானில் உள்ள உயர்மட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்களை பெற்று தருவது பற்றியும் இடம் பெற்றிருந்தது.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களிடையே மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் பொருட்டு கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஜப்பானிய பல்கலைக்கழகங்களுக்கு இடையே கல்விசார் ஒத்துழைப்பு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.