கராத்தே பயிற்சி பள்ளியில் தகுதி பட்டைகள் வழங்கும் விழா
- கராத்தே பயிற்சி பள்ளியில் தகுதி பட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது
- இப்பயிற்சி பள்ளியில் கராத்தே வீரர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது
முசிறி:
முசிறி புடோகன் கராத்தே பயிற்சி பள்ளியில் தகுதி பட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கராத்தே மாஸ்டர் செவன்த் டான் அசோக்ராஜ் தலைமை வகித்தார். சீனியர் மாணவர்கள் உமாராஜா, தமிழரசன், சுகுமார், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் தமிழரசன், செங்கனிசெல்வி ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர். விழாவை முன்னிட்டு முசிறி, தா.பேட்டை, தொட்டியம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கராத்தே மாணவர்களுக்கு பயிற்சியும், போட்டிகளும் நடத்தப்பட்டது.
பின்னர் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கராத்தே மாஸ்டர் அசோக்ராஜ் கருப்பு, வெள்ளை, ஆரஞ்சு, நீலம் உள்ளிட்ட பல்வேறு நிற பட்டைகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார். இப்பயிற்சி பள்ளியில் கராத்தே வீரர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் முசிறி பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.