பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முசிறி அரசு கலலூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முசிறி அரசு கலலூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- புதிய ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும்
திருச்சி :
திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி நுழைவாயில் முன்பு, கல்லூரியில் பணிபுரியும் விலங்கியல் துறை தலைவர் சுந்தர்ராசு, செயலாளர் பிச்சுமணி, பொருளாளர் மருதநாயகம், மூத்த பேராசிரியர்கள் கணிதத்துறை செந்தில்குமார், ஆங்கிலத்துறை முருகராஜ் பாண்டியன், வேதியல் துறை சந்திர மோகன்,
இயற்பியல் துறை தலைவர் ரேவதி, வரலாற்று துறை தலைவர் ராஜா ரவீந்திரன், வரலாற்று துறை பேராசிரியர் பரமசிவம், நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், பொருளாதார துறை பேராசிரியர் ஹேமா, மற்றும் பேராசிரியர்கள் பேராசிரியைகள் கலந்து கொண்டு வாயில் முழக்க போராட்டத்தை நடத்தினர்.
போராட்டத்திற்கு இணை பேராசிரியர் பேராசிரியர் பணி மேம்பாடு தொடர்பான அரசாணை எண் 5 முழுவதுமாக அமல் படுத்திட வேண்டும். எம். ஃபில்.,பி. எச்.டி ஊக்க ஊதிய உயர்வுணை உடனடியாக வழங்கிட வேண்டும். புதிய ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் எனவும்,
அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையை கேட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.