உள்ளூர் செய்திகள்

200 ஏக்கர் பரப்பளவில் அமையும் ஒலிம்பிக் அகாடமி

Published On 2022-12-31 10:14 GMT   |   Update On 2022-12-31 10:14 GMT
  • 200 ஏக்கர் பரப்பளவில் அமையும் ஒலிம்பிக் அகாடமி அமைய உள்ளது.
  • திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் பகுதியில்

திருச்சி:

தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கடந்த 29ம் தேதி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 1000 கோடிக்கு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது தமிழகத்தின் 4 மண்டலங்களில் அமைப்பதாக சட்டசபையில் அறிவித்த ஒலிம்பிக் அகாடமிகளில் ஒன்று திருச்சியில் அமைக்கப்படும் என அறிவித்தார். இது இங்குள்ள விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் வீரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகளை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

இந்த புதிய ஒலிம்பிக் அகாடமி திருச்சி பஞ்சப்பூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமாக 538 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் புதிய பஸ் முனையத்துக்கு 80 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சோலார் பிளான்டுக்கு 30 ஏக்கர் நிலம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளில் மொத்தம் 200 ஏக்கர் நிலம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மீதம் 325 ஏக்கர் நிலம் உள்ளது.

இதில் புதிய ஒலிம்பிக் அகாடமிக்கு 200 ஏக்கர் நிலத்தை ஒதுக்க நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.

என். நேரு, கலெக்டர் பிரதீப் குமார் ஆகியோர் கலந்தாலோசித்து முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையாளர் வைத்தியநாதன் ஆகியோரிடமும் தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் அகாடமி தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதை மேயர் அன்பழகனும் இன்று உறுதி செய்தார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது,

ஒலிம்பிக் அகாடமிக்கு பஞ்சப்பூர் உகந்த இடமாக உள்ளது. விமான நிலையமும் அருகாமையில் உள்ளது. சர்வதேச வீரர்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும். இந்த ஒலிம்பிக் அகாடமி விளையாட்டு வீரர்களுக்கு வரப் பிரசாதமாக இருக்கும் என்றார்.

Tags:    

Similar News