உள்ளூர் செய்திகள்

திருச்சி புத்தக திருவிழா குறித்து கட்டுரை, வாசகம் எழுத வாய்ப்பு - பொதுமக்களுக்கு நூலகத்துறை அழைப்பு

Published On 2023-11-20 06:09 GMT   |   Update On 2023-11-20 06:09 GMT
  • நாளை (செவ்வாய்க்கிழமை) பொதுமக்களுக்கு கட்டுரை போட்டியும், வாசகம் எழுதும் போட்டியும் நடக்கிறது.
  • போட்டிகளில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். இந்த தகவலை மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜோசப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் புத்தக திருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது நூலகத்துறையின் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) பொதுமக்களுக்கு கட்டுரை போட்டியும், வாசகம் எழுதும் போட்டியும் நடக்கிறது.

ஒவ்வொரு நூலகத்திலும் காலை 11 மணிக்கு நடைபெறும் கட்டுரை போட்டியில் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள பொதுநூலகத்துறையின் கீழ் செயல்படும் நூலகத்துக்கு சென்று கலந்து கொள்ளலாம். அதிகபட்சம் 2 மணி நேரம் வழங்கப்படும்.

கட்டுரைப்போட்டியின் தலைப்பு புத்தக வாசிப்பு என்ன செய்யும்? என்பதாகும். இதேபோல் புத்தக வாசிப்பு பற்றிய வாசகம் எழுதும் போட்டியும் நடக்கிறது. 4 வரிகளுக்கு மிகாமல் வாசகம் எழுதி நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 8825790004, 9487317509 ஆகிய வாட்ஸ்-அப் எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு அனுப்ப வேண்டும்.

போட்டிகளில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். இந்த தகவலை மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News