துறையூரில் மக்கள் நீதிமன்றம்-205 வழக்குகளுக்கு தீர்வு
- 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 205 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.
- வங்கி வாராக் கடன்கள் உள்ளிட்ட வழக்குகளில் 2 கோடியே 35 லட்சத்து 31ஆயிரத்து 950 ரூபாய் சமரசத் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது.
திருச்சி:
உச்சநீதிமன்ற உத்தரவின் படியும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆலோசனையின்படியும் துறையூர் நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியும், குற்றவியல் நீதித்துறை நடுவருமான (பொறுப்பு) சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் 500ற்றிக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 205 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. மேலும் வங்கி வாராக் கடன்கள் உள்ளிட்ட வழக்குகளில் 2 கோடியே 35 லட்சத்து 31ஆயிரத்து 950 ரூபாய் சமரசத் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர்கள் சந்திரமோகன், சபாபதி, ஜெயராஜ், துறையூர் வழக்கறிஞர் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் தனசேகரன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள், வழக்காடிகள், சட்ட தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.