உள்ளூர் செய்திகள்

மின் கட்டண உயர்வை திரும்பபெற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

Published On 2022-08-17 09:28 GMT   |   Update On 2022-08-17 09:30 GMT
  • தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
  • 200 யூனிட்டுக்கு மேல் 2 மாதங்களுக்கு மாதம் ரூ27.50-ம், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.72.50-ம், 400 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ரூ. 147.50-ம் உயர்த்த தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

திருச்சி :

200 யூனிட்டுக்கு மேல் 2 மாதங்களுக்கு மாதம் ரூ27.50-ம், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.72.50-ம், 400 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ரூ. 147.50-ம் உயர்த்த தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்.

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சியில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

கோ.அபிஷேகபுரம் பகுதிக்குழு சார்பில் கிராப்பட்டி மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் அலுவலகம் முன் பகுதிசெயலாளர் வேலுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி ஆகியோர் பேசினர்.

பின்னர் சுமார் 500 மனுக்களை மின்வாரிய உதவிசெய ற்பொறியாளரிடம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News