- திருச்சி பொன்மலைப்பட்டியில் விற்பனை நடைபெறுவதை அறிந்து அங்கு குவிந்த மதுபிரியர்கள்
- போலீசாரை கண்டதும் மதுபாட்டில்களை விட்டு விட்டு ஓட்டம்
திருவெறும்பூர்,
மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், அரசு மதுபானக்கூடங்கள், அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும். அன்று மதுபானக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களில் விற்றால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் பார் உரிமயைாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படும் தினத்தில் திருச்சி பொன்மலைப்பட்டியில் செயல்பட்டு வரும் 2 மதுபானம் கடை அருகே அமரர் ஊர்தியில் மதுபாட்டில்களை வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை நடைபெற்றது. இதனை வாங்குவதற்கு மது பிரியர்கள் குவியத் தொடங்கினர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். இதனை பார்த்த மது விற்பனை செய்தவர்கள் மது பாட்டில்களுடன் வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதனை தொடர்ந்து போலீசார் வாகனத்துடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.அமரர் ஊர்தியில் மது விற்றது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.