உள்ளூர் செய்திகள்

கால் நூற்றாண்டுக்கு பிறகு சந்தித்த பள்ளி மாணவர்கள்

Published On 2023-05-16 07:44 GMT   |   Update On 2023-05-16 07:44 GMT
  • திருச்சி தனியார் மேல்நிலைப்பள்ளியில் நெகிழ்ச்சி சந்திப்பு
  • இனிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்

திருச்சி,

திருச்சி டவுன் ரெயில் நிலையம்அருகே யு.டி.வி. மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 1996-98ம் ஆண்டில் முதல் முதலாக, 11 மற்றும் 12-ம் வகுப்பில் இருபாலர் பயிலும் பள்ளியாக மாற்றப்பட்டது. அப்போது படித்த மாணவ, மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக கூடுகின்ற அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்றனர். இவ்விழாவில், தலைமை ஆசிரியர்கள் ராமர், பிச்சை, சேவியர், சந்தானம், தமிழாசிரியர் மு.வைத்தியநாதன், ஆசிரியர்கள் திருஞானசம்பந்தம், ராஜேந்திரன், கிருஷ்ணன், பிரகாசம், அசோக் குமார், சந்திர ரவி, வெங்கடேசன், தமிழ்வாணன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.பள்ளி மாணவர்களாக மாறிய பெரியவர்கள், தங்களது வகுப்பு ஆசிரியர்கள் குறித்தும், பள்ளியில் படித்த இனிய அனுபவங்கள் குறித்தும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். விழாவின் ஆரம்பம், ஆசிரியர்களை போற்றுவதாகவும், அவர்களது அறிவுரைகளை ஏற்பதாகவும் அமைந்திருந்தது. அதனைத்தொடர்ந்:து முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவ, மாணவிகள், அவர்களின் குழந்தைகளின் உற்சாக நடன நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் சதுருதீன், டோமினிக், கிருஷ்ணமூர்த்தி, சந்திரமோகன், ஜான்சன், சரவண முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர். இப்பள்ளி தொடங்கிய நாளில் இருந்து, முன்னாள் மாணவர் சந்திப்பு என்ற நிகழ்வு நடைபெறுவது என்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News