உள்ளூர் செய்திகள் (District)

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள்

Published On 2023-03-15 08:37 GMT   |   Update On 2023-03-15 08:37 GMT
  • திருச்சி மாநகராட்சி சார்பில் நடைபெற்றது 18 இடங்களில் நடைபெற்றது
  • பொது இடங்களில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ள அறிவுறுத்தல்

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறும் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் இன்று நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பீமநகர் பகுதியில் அடைக்கலமாதா கோவில், பீரங்கிகுளம் கள்ளர்தெரு, இ.பி. ரோடு கீழவாசல் அக்ரஹாரம், எடமலைப்பட்டிபுதூர் கீழபஞ்சப்பூர், காந்திபுரம் பெருமாள்கோவில் தெரு, இருதயபுரம் சங்கிலியாண்டபுரம், மேலகல்கண்டார்கோட்டை அருணாச்சலம் நகர் அங்கன்வாடி மையம், பெரியமிளகுபாறை குளத்துக்கரை, ராமலிங்கநகர் குமரன் நகர், ஸ்ரீரங்கம் வடக்கு வாசல், தெப்பக்குளம் கீழ ஆண்டாள் வீதி, திருவானைக்காவல் புலிமண்டப சாலை, உறையூர மேட்டுத்தெரு ஆகிய இடங்களில் மாலையிலும், காமராஜ் நகரில் ராஜாராம் சாலையில் காலையிலும், தென்றல் நகரில் மாலையிலும், காட்டூர் பாத்திமாபுரத்தில் காலையிலும், வடக்கு காட்டூர் நூலகத்தில் மாலையிலும், சுப்பிரமணியபுரத்தில் எல்.எஸ்.பி. காலனியில் காலையிலும், தாமரை நகரில் மாலையிலும், தென்னூர் காஜாத்தோப்பில் காலையிலும், ஜாகீர் உசேன் தெருவில் மாலையிலும், திருவெறும்பூர் கக்கன் காலனியில் காலையிலும், எலியட் காலனியில் மாலையிலும் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு உரிய பரிசோதனை செய்து பயன்பெறுமாறு திருச்சி மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News