உள்ளூர் செய்திகள்

திருச்சி மாநகரில் விபத்துகள் அதிகம் நடைபெறும் 21 பகுதிகளில் பிரத்யேக சிக்னல்-போலீஸ் கமிஷனர் சத்யபிரியா தகவல்

Published On 2023-05-25 07:54 GMT   |   Update On 2023-05-25 07:54 GMT
  • திருச்சி மாநகரில் விபத்துகள் அதிகம் நடைபெறும் 21 பகுதிகளில் பிரத்யேக சிக்னல் அமைக்கப்பட உள்ளது
  • போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

திருச்சி,

திருச்சி மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தங்கள் கண்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் குளிர் கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து நிருபர்களிடம் கூறுகையில், திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான கூடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பகுதியில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதியில் ஒன்றாக உள்ளதால், அங்கு சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் 21 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளிலும் இதுபோன்ற சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது. இதேபோன்று போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலை விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News