உள்ளூர் செய்திகள்

திருச்சி அருகே மாநில அளவிலான ஆக்கி போட்டி-எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்

Published On 2022-12-06 09:45 GMT   |   Update On 2022-12-06 09:45 GMT
  • தொட்டியம் அருகே மாணவிகளுக்கான மாநில அளவிலான ஆக்கி போட்டியை எம்.எல்.ஏ. தியாகராஜன் தொடங்கி வைத்தார்
  • திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், தருமபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆக்கி வீராங்கனைகள் பங்கேற்றனர்

திருச்சி:

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான மாணவிகளுக்கான மாநில அளவிலான ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியை முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளமான காடுவெட்டி ந.தியாகராஜன் பயிற்சியாளர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துக்கள் கூறி போட்டியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ந.அன்பானந்தம், நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ந.கமலம், தொட்டியம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலா ந.திருஞானம், ஒன்றிய கவுன்சிலர் தீபாசெல்லத்துரை,

நத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கூன்ரெங்கம்பட்டி விஸ்வநாதன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜ்குமார், நத்தம் குறிஞ்சி நகர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், தருமபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆக்கி வீராங்கனைகள், தொட்டியம் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News