உள்ளூர் செய்திகள் (District)

வழிபறியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - காவல் மாநகர ஆணையர் எச்சரிக்கை

Published On 2022-12-09 09:46 GMT   |   Update On 2022-12-09 09:46 GMT
  • வழிபறியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் மாநகர ஆணையர் தெரிவித்துள்ளார்
  • திருச்சி மாநகரில் கத்திைய காட்டி மிரட்டி

திருச்சி:

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் கத்தியை காண்பித்து கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை திருச்சியை சேர்ந்த ரத்தினவேல் (வயது 20) என்ற ரவுடி பரித்து சென்றார்.

பின்னர் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, எடமலைபட்டிபுதூர் காவல்நிலைய ஆய்வாளரின் அறிக்கையின்படி ரத்தினவேலை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர் படுத்தினர். அப்போது ஒரு வருட காலத்துக்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை ரத்தினவேல் தாக்கல் செய்துள்ளார்.

பின்னர் ரத்தினவேல் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து மீண்டும், நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ரத்னவேல் ஆஜர் படுத்தப்பட்டார். இதையடுத்து நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 317 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து ரத்தினவேல் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இது குறித்து திருச்சி காவல் மாநகர ஆணையர் கார்த்திகேயன் தெரிவிக்கையில்,

திருச்சி மாநகரில் இதுபோன்ற கத்தியை காண்பித்து பணம், நகை கொள்யைடுக்கும் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News