உள்ளூர் செய்திகள்

சிறந்த நூலகமாக துறையூர் நூலகம் தேர்வு

Published On 2023-11-21 06:22 GMT   |   Update On 2023-11-21 06:22 GMT
  • சிறந்த கிளை நூலகமாக துறையூர் கிளை நூலகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது
  • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டி கேடயம் வழங்கினார்

துறையூர்,

தமிழக அரசின் பொது நூலக துறையின் கீழ் செயல்பட்டு வரும் நூலகங்க ளுக்கு ஒவ்வொரு வருடமும் சிறந்த நூலகங்களுக்கான கேடயம் வழங்குவது வழக்கம்.இந்த கேடயம் வழங்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட நூலகத்தில் அதிக எண்ணிக்கையில் உறுப்பி னர்களை சேர்த்தல், அதிகமான புரவலர்களை சேர்த்தல், நூலகத்தின் செயல்பாடு, நூலகத்திற்கு அதிக நன்கொடை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அலகாக பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 2022 - 2023 வருடத்திற்கான அதிக நன்கொடை பெற்ற நூலகமாக துறையூர் கிளை நூலகம் தேர்வு செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து மயிலாடுது றையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி த்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துறையூர் கிளை நூலக அலுவலர் பாலசந்தருக்கு அதற்கான கேடயத்தை வழங்கி னார். இந்நிகழ்வில் பொது நூலக இயக்குனர் இளம்பகவத், பொது நூலகத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.துறையூர் நூலகம் ஆனது 3 தளத்துடன் கூடிய கட்டிடத்தில் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் 16,700 உறுப்பினர்களுடன் கிராமப்புற மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துதல், போட்டித் தேர்வுக்கு தேவையான புத்தகங்களுடன் சிறந்த முறையில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News