தடகள போட்டியில் திருச்சி பள்ளி மாணவர் சாதனை
- ஹரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் திருச்சி சமது பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்
- கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க இருப்பதோடு, மாணவன் சூரஜின் இந்த சாதனை திருச்சிக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது
திருச்சி:
தேசிய அளவிலான தடகள் போட்டிகள் ஹரியானாவில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி காஜாநகரில் உள்ள சமது மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவரும், தடகள வீரருமான ஏ.சூராஜ் 400 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
மேலும் 20-வது தேசிய பெடரஷன் கப் ஜூனியர்ஸ் போட்டியில் 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவினருக்கான தடகள போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கமும் வென்றார்.
மேலும் இதன் மூலம் வருகிற 1.8.2022 முதல் 6.8.2022 வரை கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க இருக்கிறார்.
மாணவன் சூரஜின் இந்த சாதனை திருச்சிக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த வெற்றியை பாராட்டும் வகையில், மஜ்லிஸ் உல் உலமா சங்கத்தலைவர் டாக்டர் ஏ.கே.காஜா நஜிமுதீன், பள்ளியின் தாளாளரும், செயலாளருமான டாக்டர் வி.எஸ்.ஏ.ஷேக் முகமது சுஹேல்,
பள்ளி பொருளாளர் ஹாஜி ஏ.எஸ்.காஜாமியான் அக்தர் மஜ்லிசுல் உலமா சங்க உறுப்பினர் ஏ.எம்.முகமது ஆஷிக், பள்ளி முதல்வர் டாக்டர் சி.ஜே.சாக்கோ, உடற்கல்வி இயக்குநர் டி.உமா மகேஸ்வரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.