உள்ளூர் செய்திகள்

காலை உணவு திட்டம் தந்த மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு

Published On 2022-09-17 09:52 GMT   |   Update On 2022-09-17 09:52 GMT
  • மு.க.ஸ்டாலின் தந்த காலை உணவு திட்டத்தை வரவேற்றனர்
  • இந்திய நாடார் பேரவை சுரேஷ் அறிக்கை

திருச்சி:

இந்திய நாடார் பேரவை தலைவர் ஜெ.டி.ஆர்.சுரேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 9 ஆண்டு காலம் பொற்கால ஆட்சியை தந்தவர் பெருந்தலைவர் காமராஜர். ஏழைகளின் கல்வியை உறுதி செய்ய உலகம் போற்றும் உன்னத மதிய உணவு திட்டத்தை தந்த காமராஜருக்கு மணிமண்டபம் தந்து அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர் மு.கருணாநிதி.

இன்றைக்கு அவரது தனயனும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், காமராஜர் வழி நின்று ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் அற்புதத் திட்டத்தை தந்திருக்கிறார். இதன் மூலம் ஏழை மாணவர்கள் கூடுதலாக பள்ளிக்கு வரும் வாய்ப்பு பிரகாசமாகி இருக்கின்றது.

திருச்சியில் இந்த திட்டத்தினை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு துறையூர் ஒன்றியம் நடுவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்து பெருந்தலைவர் காமராஜரையும் நினைவு கூர்ந்து பெருமை சேர்த்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் அடியொற்றி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்திய நாடார் பேரவை வரவேற்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags:    

Similar News