உள்ளூர் செய்திகள்

புதிய மின் விளக்குகளை உடனே அமைக்க சிபிஎம் கோரிக்கை

Published On 2023-05-09 06:47 GMT   |   Update On 2023-05-09 06:47 GMT
  • திருச்சி மாநகரில் எரியாத விளக்குகளுக்கு பதிலாக புதிய விளக்குகள் பொருத்த கோரி மனு
  • மின்வாரிய ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது

திருச்சி,

திருச்சி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோ.அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகத்தில் மின்வாரிய ஆணையரிடம் ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 62-வது வார்டு பஞ்சப்பூர் பகுதி, புதுத்தெரு, ஆர். எம்.எஸ்.காலனி, அண்ணாநகர், எடமலைப்பட்டி புதூர், ராமச்சந்திரா நகர், செட்டியபட்டி, அன்பிலார் நகர், சொக்கலிங்கபுரம், படுகை, 57-வது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர், அரசு காலனி, பிள்ளையார் கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, முத்து மாரியம்மன் கோவில் தெரு, 58-வது வார்டுக்குட்பட்ட அண்ணாநகர், சுந்தரம் பிள்ளை தோட்டம்,கிராப்பட்டி, பாரதி நகர், 63-வது வார்டுக்குட்பட்ட ஐயப்ப நகர், கே கே.நகர், எல்.ஐ.சி. காலனி, 64-வது வார்டுக்குட்பட்ட கே.கே.நகர், உடையாம்பட்டி, இ.பி.காலனி, 59-வது வார்டுக்குட்பட்ட காஜாமலை காலனி ஆகிய பகுதிகளில் சிதிலமடைந்து எலும்புக்கூடு போல் காணப்படும் மின் கம்பங்களால் விபத்து மற்றும் உயிர்ப்பலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.ஆகவே பழுதான மின்கம்பங்களை உடனடியாக மாற்றி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் எரியாத மின் விளக்குகளுக்கு பதிலாக புதிய மின் விளக்குகளை அமைக்க வேண்டும். டிரான்ஸ்பார்மர் இல்லாத பகுதிகளுக்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை மின்வாரிய ஆணையரிடம் கொடுத்த போது சி.பி.எம். கட்சி உறுப்பினர்கள் நிர்மலா, வேம்பு, கார்த்தி, சதாசிவம், யுவசக்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News