உள்ளூர் செய்திகள்

பணிமாறுதல் மூலம் பதவி இறக்கம் கூடாது

Published On 2023-10-02 06:54 GMT   |   Update On 2023-10-02 06:54 GMT
பணிமாறுதல் மூலம் பதவி இறக்கம் கூடாதுதலைமை ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

 திருச்சி,  

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் அழகிரிசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில்,

தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில், பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியரில் இருந்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணி மாறுதல் மூலம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமனம் பெறுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.பின்னர் முதலில் தடையாணை வழங்கப்பட்டு பின்பு, 2008-ல் அந்தத் தடை விலக்கி கொள்ளப்பட்டதால் மீண்டும் 2008 முதல் 2015 வரை 7 ஆண்டுகள் முன்பு வழங்கியது போல் பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 2023-ல் டிவிசன் பெஞ்ச் தீர்ப்பில் அந்த பதவி உயர்வு திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.

இதில் தனி நீதிபதி 2018 தமிழக அரசு வழங்கிய உத்தரவின்படி பள்ளி கல்வித்துறை 4-7-2018 நாளது மற்றும் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணிகள் விதி 9 மற்றும் 13-படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் உரிமையை விட்டு தந்த தகுதியின் அடிப்படையிலும், லெயின் தொடரும் என்ற பணி விதிகளும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் 23-3- 2023 நாளிட்ட தீர்ப்பு உரிமை துறப்பு மீதான தீர்ப்பு அல்ல என்பதால் 2018, 19, 20, 21-ம் ஆண்டுகளில் பணி மாறுதல் வழங்கப்பட்ட உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கையை தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையும் பரிசீலித்து தற்போது உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணிபுரியும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் தொடர்ந்து தலைமை ஆசிரியர்களாக நீடிக்க ஆவண செய்ய வேண்டும். மாறுதல் மூலம் பணிபுரியும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்யக்கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் முன்னாள் மாநில பொது செயலாளர்கள் அருள் சுந்தர்ராஜன், நடராஜன், அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன், பொருளாளர் இளங்கோ, மாவட்ட அமைப்புச் செயலாளர் ராஜசேகரன், மாவட்ட பொருளாளர் திலகநாதன்,செயலாளர் பெரியசாமி, இணைச் செயலாளர்கள் அழகு சுப்பிரமணியன், சிவக்குமார், மதியழகன்மற்றும் 38 மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News