போலி வாரிசு சான்றிதழ் கொடுத்து ரெயில்வே வேலையில் சேர முயற்சி
- திருச்சி பொன்மலையில்போலி வாரிசு சான்றிதழ் கொடுத்து ரெயில்வே வேலையில் சேர முயற்சி
- 4 பேர் மீது வழக்குபதிவு- போலீசார் நடவடிக்கை
திருச்சி,
திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்ல துரை. இவர் ரெயில்வே ஊழியர். கடந்த 2011-ம் ஆண்டு இறந்துவிடுகிறார்.
இவர் உயிருடன் இருக்கும் போதே முதல் மனைவி பழனியம்மாள் மற்றும் பிள்ளைகள் ராஜா, ராதா , சதீஷ்குமார் ஆகியோர் செல்லத்துரையை விட்டு பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது.
இதனால் செல்லத்துரை சரோஜா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண் டார். சரோஜாவுக்கு கதிர் வேல் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் திருச்சி பொன்மலை ரெயில்வேயில் கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்காக முதல் மனைவி பழனிய ம்மாள் அவரது பிள்ளைகள் ராஜா, ராதா, சதீஷ்குமார் ஆகியோர் 2-ம் தாரத்து மகன் கதிர்வேலை சட்ட வாரிசாக காட்டாமல் மறைத்து மோசடி செய்து வாரிசு சான்றிதழ் பெற்று ள்ளனர்.
மேலும் அந்த வாரிசு சான்றிதழை கொடுத்து ரெயில்வே வேலை பெறு வதற்கு முயற்சி செய்து ள்ளனர்.
இதனை அறிந்த கதிர் வேல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் காவல்துறையி னரிடம் புகார் அளித்தார்.அதன் மீது நடவடிக்கை இல்லை என்பதால் திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 5-ல் வழக்கு பதிவு செய்ய கூறி புகார் செய்தனர்.
புகார் மனுவை விசாரித்த நீதிமன்றம் பழனியம்மாள், ராஜா, ராதா, சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த பொன்மலை காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டதன் பேரில் பொன்மலை போலீசார் பழனியம்மாள், ராஜா, ராதா, சதீஷ்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகி ன்றனர்.