வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் காசநோய் கண்டறியும் முகாம்
- காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.
- இம்முகா மில், 180 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் நடமாடும் எக்ஸ்ரே எந்திரத்தை பயன்படுத்தி காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.
கிராமத்திற்கே சென்று, காசநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகை யில், மாவட்டம் தோறும் தமிழக அரசு சுகாதாரத்துறை வாயிலாக நடமாடும் எக்ஸ்ரே எந்திரத்தை வழங்கியுள்ளது. இந்த எந்திரத்தை பயன்படுத்தி, தொடர் இருமல், சளி உள்ளிட்ட காசநோய் அறிகுறி உள்ளவர்களுக்கு அந்தந்த பகுதிக்கே சென்று பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வாழப்பாடி அருகே பேளூர் சுகாதார வட்டா ரத்தில், சந்திரபிள்ளை வலசு கிராம மக்கள் மற்றும் சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் நிறுவன ஊழியர்களுக்கு இருதி னங்களாக, இத்திட்டத்தின் கீழ் காச நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையில், தொண்டு நிறுவன மாநில பொறுப்பாளர் ரவிசங்கர், காசநோய் பிரிவு மாவட்ட மேற்பாற்வையாளர் சதாசிவம்,வட்டார காச நோய் மேற்பார்வையாளர் ராஜ்குமார், ஆய்வக நுட்புனர் கவிதா ஆகியோர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் மேலாளர்கள் சுரேஷ்குமார், மணிவேல் மற்றும் பணியாளர்கள் முனியசாமி, வடிவேல், பேளூர் சுகாதார ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் முகா மிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இம்முகா மில், 180 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.