தூத்துக்குடி யூனியன் குமாரகிரி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் - கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
- தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது
- நவம்பர் 1 -ந்தேதியை உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.
கூட்டுடன்காடு ஊராட்சி இந்திராநகரில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் ஹரி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மறவன்மடத்தில் ஊராட்சி தலைவர் லில்லிமலர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
குளியன்கரிசலில் கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் முக்கனி தலைமை தாங்கினார். சேவைக்காரன் மடத்தில் ஊராட்சி தலைவர் ஜெபக்கனி ஞானசேகர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அல்லி குளத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ஆனந்தி மாரிமுத்து தலைமை தாங்கினார்.
கீழத்தட்டப்பாறையில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பத்மா பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். கோரம்பள்ளத்தில் ஊராட்சி தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கட்டாலங்குளத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சங்கரேஸ்வரி தலைமை தாங்கினார். முடிவைத்தானேந்தல் ஊராட்சியில் தலைவர் ரம்யா தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. முள்ளக்காடு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நவம்பர் 1 -ந்தேதியை உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப் பட்டது. குமாரகிரி ஊராட்சி தலைவர் ஜாக்சன் துரைமணி தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் கூட்டாம்புளியில் நடைபெற்றது. இதில் குமாரகிரி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த கேட்டுக் கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.